

ஆலங்குடி அருகே எம்.ராசியமங்கலம் ஏ.டி.காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் பூமிகா (வயது 21). வீட்டில் இருந்த பூமிகாவை காணவில்லை. பல்வறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து பூமிகாவை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.