கஞ்சா வைத்திருந்தவர் சிக்கினார்

கஞ்சா வைத்திருந்தவர் சிக்கினார்
Published on

கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரிராஜன் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி செந்தில்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கிருஷ்ணகிரி செட்டியம்பட்டி பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 19) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com