குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துவதுதான் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் - முத்தரசன்

குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துவதுதான் தேர்வாணையத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துவதுதான் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் - முத்தரசன்
Published on

சென்னை,

குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துவதுதான் தேர்வாணையத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில் இரண்டாம் நிலை அலுவலர்கள் முக்கியத்துவம் வாய்ந்த கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியவர்கள். இதற்கான தேர்வு மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

கேள்விதாள் வழங்கப்பட்டதில் தொடங்கி, பல ஏற்பாடுகளில் தேர்வாணையம் தவறுகளுக்கு இடமளித்து விட்டதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தேர்வாணையத்தின் விளக்கமும் ஏற்கத்தக்க முறையில் இல்லை.

இந்த நிலையில், குழப்பமும், குளறுபடிகளும் நிறைந்த குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துவதுதான் தேர்வாணையத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுதிபட வலியுறுத்தி, இதற்கான முறையில் சந்தேகத்தின் நிழல் படிந்துவிட்ட தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த வேண்டும் என பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com