கன்னியாகுமரி-திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து-தெற்கு ரெயில்வே அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் சாலிமாரில் இருந்து ஆகஸ்டு 4-ந்தேதி மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(22825), ஒரு மணி நேரம் தாமதமாக சென்டிரல் வந்தடையும்.
எக்ஸ்பிரஸ் ரெயில்
Published on

சென்னை

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஒடிசா மாநிலம் பாலசோர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ள இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* விழுப்புரத்தில் இருந்து வருகிற ஆகஸ்டு 4-ந்தேதி காலை 11.05 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(வண்டி எண்.22604), மறுமார்க்கமாக காரக்பூரில் இருந்து வருகிற ஆகஸ்டு 6-ந்தேதி மதியம் 2 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(22603) ரத்து செய்யப்படுகிறது.

* அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து ஆகஸ்ட் 4-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(22504), மறுமார்க்கமாக கன்னியாகுமரில் இருந்து ஆகஸ்டு 7-ந்தேதி மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(22503) ரத்து செய்யப்படுகிறது.

* மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து ஆகஸ்டு 3-ந்தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(22605), அதற்கு மாற்றாக, புருலியாவில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து ஆகஸ்டு 5-ந்தேதி அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு புருலியா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(22606), அதற்கு மாற்றாக நெல்லையில் இருந்து ஒரு மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு புருலியா செல்லும்.

* மேற்கு வங்க மாநிலம் சாலிமாரில் இருந்து ஆகஸ்டு 4-ந்தேதி மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(22825), ஒரு மணி நேரம் தாமதமாக சென்டிரல் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com