

செம்பட்டு,
வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெளிநாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருவதால் அங்கிருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான முடிவுகள் சுமார் 5 மணி நேரத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இருந்து தற்போது சிங்கப்பூர் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்பேரில், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளுக்கு நேற்று முதல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. இந்தநிலை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.