

மதுரை
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர பாண்டியன் (வயது 41). சமூக ஆர்வலரான இவர், டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில், மதுரை வடக்கு சட்ட மன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்தநிலையில் அவர் மதுரை தத்தனேரி சுடுகாட்டில் உள்ள மயான காளி கோவிலில் சிறப்பு பூஜை மேற்கொண்டார். அதில், பணம் கொடுத்து ஓட்டுகளை பெறும் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுக்க வேண்டும். அவர்கள் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் எனவும் வேண்டி விளக்கேற்றி சிறப்பு பூஜைகள் செய்தார்.
இதுகுறித்து சங்கரபாண்டியன் கூறியதாவது:-
ஒவ்வொரு முறையும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதால் எனக்கு தோல்வி கிடைக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகள் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, வாக் காளர்களுக்கு கொடுக்கின்றனர். இதுகுறித்து, நான் பல முறை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.
தற்போதும், ஓட்டுக்கு பணம் கொடுக் கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக, ஊழல் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுத்து. இந்த தேர்தலோடு அவர்களின் சகாப்தம் முடிய வேண்டும் என தத்தனேரி சுடுகாட்டில் உள்ள மயான காளி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுடுகாட்டில் சிறப்பு பூஜை செய்த சங்கர பாண்டியனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.