தூத்துக்குடியில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: 4 பேர் கைது
Published on

தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் கடந்த 7.1.2026 அன்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தாளமுத்துநகர் பகுதியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயிலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இதேபோல் நேற்று முன்தினம் (8.1.2026) தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு கடந்த 3 நாட்களில் மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. மேற்சொன்னபடி துரிதமாக செயல்பட்டு கஞ்சா ஆயில் வைத்திருந்த குற்றவாளிகளை கைது செய்தும், சொத்துக்களை பறிமுதல் செய்தும் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.

இதுபோன்று கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு DrugFreeTN எனும் செயலியை உருவாக்கியுள்ளது. அந்த செயலியின் மூலம் பொதுமக்கள் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி (anonymous) தயங்காமல் புகார் அளிக்கலாம். மேலும் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பழக்கத்தை குறைக்கும் நோக்கத்தோடு, தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com