கஞ்சா விற்றவர் கைது

எட்டயபுரத்தில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்றவர் கைது
Published on

எட்டயபுரம்:

எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை பிடித்தனர். விசாரணையில், எட்டயபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த முத்து முருகன் (வயது 52) என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்து முருகனை கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com