குற்றால அருவிகளில் குளிக்க முடியவில்லையா... பக்கத்தில் இன்னொரு அருவி இருக்கு!

குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் இருந்து குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆனால், பக்கத்தில் இன்னொரு அருவி இருக்கிறது என்பது பலருக்கு தெரியாது. ஏன், தென்காசி மாவட்டத்தில் இருப்பவர்களுக்கே தெரியாது. அதாவது, தமிழக, கேரளா எல்லைப் பகுதியான அச்சன்கோவில் செல்லும் சாலையில் மணலாறு அருவி அமைந்துள்ளது. தற்போது, குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மணலாறு அருவியில் சீராக தண்ணீர் விழுவதால், இங்கே பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த மணலாறு அருவி கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கே பிளாஸ்டிக் பைகள், மது பாட்டில்கள் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. அதே நேரத்தில், நபர் ஒருவருக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com