தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு

தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் இன்று முதல் சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியுள்ளது. மேலும் ஏப்ரல் 6 அன்று நடைபெறும் தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையத்தால் தயார்படுத்தியுள்ளது.

தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே மீண்டும் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் உள்பட பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இது குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டாலும் இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால், யூகங்களின் அடிப்படையில் வரும் குற்றச்சாட்டுகளுக்கு செவிகொடுத்து வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com