

மதுரை,
2019 பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிப்பது கடினம் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது:- தற்போது அரசியல் சூழல் மிகவும் கடினமாக இருக்கிறது. அடுத்த பிரதமராக யார் வரப்போகிறார்கள் என்பதை நம்மால் சொல்ல முடியவில்லை.
ஆனால், நிலவரம் மிகவும் சுவாரசியமாக உள்ளது. நான் அரசியல் மீது கவனம் செலுத்தவில்லை. ஆன்மிக நாட்டையும் ஆன்மிக உலகத்தையுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம். யோகா மற்றும் வேத நடைமுறைகள் உள்ள செழுமையான ஆன்மிக இந்தியாவை உருவாக்கி கொண்டு இருக்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.