கயத்தாறு அருகே கார் விபத்து:அரசு டாக்டர் தம்பதி, மகள் படுகாயம்

கயத்தாறு அருகே கார் விபத்து: அரசு டாக்டர் தம்பதி, மகள் படுகாயம் அடைந்தனர்.
கயத்தாறு அருகே கார் விபத்து:அரசு டாக்டர் தம்பதி, மகள் படுகாயம்
Published on

கயத்தாறு:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பூதப்பாண்டி திட்டவிளை, அண்ணா நகரை சேர்ந்த பாவாசா மகன் ஷெரிப் (வயது 36). இவரது மனைவி ஆயிஷா( 30). இருவரும் அரசு டாக்டர்கள். இவர்களது மகள் ஆமினா(5). இவர்கள் மூன்று பேரும் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் கார் கயத்தாறு அருகே ஆசூர் நாற்கர சாலை பாலத்தின் திண்டில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்- இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com