

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. மறைமலைநகர் சாமியார் கேட் அருகே வரும்போது சாலை சந்திப்பில் ஒரு ஆட்டோ திரும்பியபோது அந்த ஆட்டோ மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது. ஆட்டோவும் சேதமடைந்தது. இதில் காரில் இருந்த 2 பேர், ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த கார், ஆட்டோவை சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.