பூந்தமல்லி அருகே சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த கார்

கார் எப்படி எரிந்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
பூந்தமல்லி அருகே நெடுஞ்சாலையில் வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவற்றில் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் சட்டென்று கார் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் போக்கு வரத்தில் பாதுப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த கார் எப்படி எரிந்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த சம்பவத்தால் அந்த சாலையில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story






