நடுரோட்டில் பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்

தீ விபத்தால் மலைப்பாதையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நடுரோட்டில் பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்
Published on

குன்னூர்,

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர். இவர், 4 பேருடன் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள கக்காட்சி என்ற கிராமத்துக்கு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்து கொண்டிருந்தார். குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே வந்த போது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. அடுத்த சில நொடிகளுக்குள் புகை தீயாக மாறியது.

இதனால் காரில் இருந்தவர்கள் சுதாரித்து கொண்டு உடனடியாக காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர். அதன் பின்னர் காரில் தீ மளமளவென பற்றி எரிந்தது. குன்னூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் கார் சாலையோரம் அப்புறப்படுத்தப்பட்டது. தீ விபத்தால் மலைப்பாதையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com