அருப்புக்கோட்டை அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய சரக்கு வேன் மீது கார் மோதல் - 3 பேர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே சரக்கு வேன் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
அருப்புக்கோட்டை அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய சரக்கு வேன் மீது கார் மோதல் - 3 பேர் உயிரிழப்பு
Published on

அருப்புக்கோட்டை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கழுவன்பொட்டலை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மற்றும் உறவினர்கள் 16 பேர் இருக்கங்குடி முத்துமாரியம்மன் கோவிலில் சாமிகும்பிட்டுவிட்டு சரக்கு வேனில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் வந்த வேன் பந்தல்குடி அருகே வேலாயுதபுரம் விளக்கில் வந்த போது பின்னால் வந்த கார், சரக்கு வேன் மீது மோதியது. இந்த விபத்தில் சரக்கு வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெருமாள் அக்காள் (வயது 50), புவித்ரா(12 ) நதிமாறன் (வயது 3) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com