மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பலி

விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி பலியானார்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பலி
Published on

விராலிமலை தாலுகா விராலூர் ஊராட்சி குள்ளம்பட்டியை சேர்ந்தவர் நல்லான் மகன் நல்லுச்சாமி (வயது 47). தொழிலாளி. இவர், சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் விராலூர் அருகே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வானதிராயன்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக நல்லுச்சாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த நல்லுச்சாமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த நல்லுச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com