தூத்துக்குடியில் கார் பாலத்தில் மோதி விபத்து : டிரைவர் சாவு - 2 பேர் படுகாயம்

கயத்தார் அருகே கார் பாலத்தில் மோதிய விபத்தில் டிரைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் கார் பாலத்தில் மோதி விபத்து : டிரைவர் சாவு - 2 பேர் படுகாயம்
Published on

தூத்துக்குடி,

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியைச் சேர்ந்த குமரேசன் மகன் கணேசன் (32) மற்றும் பாளையங்கோட்டை செஞ்சி காலணி பகுதியைச் சேர்ந்த மோகன் மகள் ஐஸ்வர்யா (27) ஆகியோர் மதுரைக்கு சென்று திரும்பி காரில் திருநெல்வேலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் மாரிசெல்வம் (29) ஓட்டி வந்தார்.

மதுரை–திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தார் அருகே வந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மாரிசெல்வம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயமடைந்த கணேசன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கயத்தார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com