போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது

போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது
போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது
Published on

போளூர்

போளூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 31), கார் டிரைவர். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது முனுசாமி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் திருமணத்துக்கு மறுத்ததுடன் மாணவியை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த மாதம் 30-ந் தேதி திருவண்ணாமலை குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் போளூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு அறிவுறுத்தினர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முனுசாமியை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com