கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

கடையநல்லூரில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சித்துராஜ் (வயது 36). கார் டிரைவர். குடும்ப பிரச்சினை காரணமாக மனம் உடைந்து காணப்பட்ட சித்துராஜ், கடந்த 8-ந்தேதி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சித்துராஜ் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com