நடுரோட்டில் கார் தீப்பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர்

பல்லடம் அருகே நடுரோட்டில் கார் தீப்பற்றி எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர்
நடுரோட்டில் கார் தீப்பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர்
Published on

பல்லடம் அருகே நடுரோட்டில் கார் தீப்பற்றி எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர்

திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 70). இவர் தனது மனைவியுடன் திருப்பூரிலிருந்து பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அருகே வந்த போது காரை சாலையோரம் நிறுத்தி விட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றார். பின்னர் மீண்டும் வந்து காரை ஸ்டார்ட் செய்த போது திடீரென காரின் முன்பக்க என்ஜினில் இருந்து புகையுடன் தீப்பிடித்தது. இதனை கண்டு கணவன்-மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து காரை விட்டு இறங்கினர். இதன் காரணமாக தீ விபத்தில் இருந்து முதியவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த நிலையில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து தீயணைப்புதுறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் காரின் முன்பகுதி தீயில் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com