கோத்தகிரி அருகே 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது-டிரைவர் உயிர் தப்பினார்

கோத்தகிரி அருகே 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது- டிரைவர் உயிர் தப்பினார்
கோத்தகிரி அருகே 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது-டிரைவர் உயிர் தப்பினார்
Published on

கோத்தகிரி

கோவ மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் பாலா. இவர் நேற்று மாலை கோத்தகிரிக்கு தனது சொந்த வேலையாக காரில் வந்து விட்டு, மீண்டும் சிறுமுகை செல்வதற்காக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்றுள்ளார். காரை அவரே ஓட்டிச் சென்றுள்ளார். கார் குஞ்சப்பனை சோதனை சாவடியை கடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு குறுகிய வளைவில் காரை திருப்ப பாலா முயற்சித்துள்ளார். ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் பக்கவாட்டில் இருந்த சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து அங்குள்ள மரத்தில் மோதி நின்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டிச் சென்ற பாலா காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com