மலைப்பாதையில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - சுற்றுலா வந்தபோது சோகம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடந்த கார் விபத்தில் தம்பதியினர் காயம் அடைந்தனர்.
மலைப்பாதையில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - சுற்றுலா வந்தபோது சோகம்
Published on

சேலம்,

தர்மபுரியை சேர்ந்த செல்வம் (34), தனது மனைவி விஜயா மற்றும் உறவினர்கள் 4 பேருடன் நேற்று ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தார். காரை செல்வமே ஓட்டி வந்தார். மலைப்பாதையில் 17-வது கொண்டை ஊசி வளைவில் கார் வந்தபோது, திடீரென ஒரு குரங்கு சாலையை கடக்க ஓடியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் செல்வமும், அவரது மனைவி விஜயாவும் காயமடைந்தனர். மற்ற 3 பேர் காயமின்றி உயிர்தப்பினர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com