சேலம் அருகே ஓடையில் பாய்ந்த கார் - 5 பேர் காயம்

இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி, அதில் பயணம் செய்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.
சேலம் அருகே ஓடையில் பாய்ந்த கார் - 5 பேர் காயம்
Published on

சேலம்,

சேலத்தை சேர்ந்த மன்சூர் (48), அவரது மனைவி வகிதாபானு, மகன் அஜ்மல், மைத்துனர் சாதிக், மாமியார் ஹாபிராமா ஆகியோர் 5 பேரும் ஆத்தூரில் உறவினர் இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரில் சேலத்திற்கு திரும்பி வந்தனர். காரை அஜ்மல் ஓட்டி வந்தார்.

வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே சென்றபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஓடையில் பாய்ந்தது. இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி, அதில் பயணம் செய்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com