கார் திருட்டு

நாமக்கல்லில் பட்டறையில் நிறுத்தியிருந்த கார் திருட்டு போனது.
கார் திருட்டு
Published on

நாமக்கல் அருகே உள்ள அணியாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது38). இவர் நாமக்கல் - மோகனூர் சாலையில் கார் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 10-ந் தேதி இவர் தனது பட்டறைக்கு பழுது பார்க்க வந்த காரை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கார் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து பாலசுப்பிரமணியம் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான காரை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com