கார்-வேன் மோதல்; காங்கிரஸ் பிரமுகர் படுகாயம்

கார்-வேன் மோதிக்கொண்ட விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் படுகாயம் அடைந்தார்.
கார்-வேன் மோதல்; காங்கிரஸ் பிரமுகர் படுகாயம்
Published on

குன்னம் 

பெரம்பலூர் அபிராமபுரத்தை சேர்ந்தவர் தங்க.தமிழ்ச்செல்வன் (வயது 47). வக்கீலான இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். தமிழ்ச்செல்வன் நேற்று மதியம் காரில் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் கவுல்பாளையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காரும், எதிரே திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த வேனும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் தமிழ்ச்செல்வன் படுகாயமடைந்தார். வேனை ஓட்டி வந்தவரும், அதன் உரிமையாளருமான முத்துப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்(39) லேசான காயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் தமிழ்ச்செல்வன் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுரேஷ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com