கார் கண்ணாடி உடைப்பு

கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
கார் கண்ணாடி உடைப்பு
Published on

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்த தாமஸ் மகன் ராபர்ட் (வயது 27). சம்பவத்தன்று இவர் தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். நேற்று அதிகாலை தேவாலயத்துக்கு செல்வதற்காக காரை எடுக்க முயற்சி செய்தார். அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com