கூடலூரில் - ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து


கூடலூரில் - ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 13 Feb 2025 1:03 PM IST (Updated: 13 Feb 2025 4:39 PM IST)
t-max-icont-min-icon

லாரி கவிழ்ந்ததால் கூடலூர், ஊட்டி இடையே சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை (மலைப்பாதை) செல்கிறது. இந்த நிலையில் மைசூரில் இருந்து கூடலூருக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று இன்று காலை 7.15 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது கூடலூர் அருகே தவளமலை என்ற இடத்தில் வந்த போது சரக்கு லாரியின் ஸ்டீயரிங் திடீரென செயலிழந்தது. இதனால் லாரியை கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 15 அடி ஆழமுள்ள அதே சாலையில் கீழே உருண்டு விழுந்தது.

இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்த்தப்பினார். இருப்பினும் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் லாரி விழுந்து உருக்குலைந்தது. மேலும் அரிசி மூட்டைகளும் சிதறியது. இதனால் கூடலூர் - ஊட்டி இடையே சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் மற்றும் மீட்பு வாகனத்தின் உதவியுடன் சரக்கு லாரியை சாலையோரம் தூக்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து காலை 10.45 மணிக்கு போக்குவரத்து சீரானது. இந்த விபத்தால் பொதுமக்கள், கேரளா - கர்நாடகா உள்பட டெல்லி மாநில சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்ததுடன் தாமதமாக புறப்பட்டு சென்றனர்.

1 More update

Next Story