

குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் ஒரு சரக்கு வேன் யூனிட் ஆற்று மணலுடன் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் அங்கு சென்று மணலுடன் நின்றிருந்த சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து, சட்டவிரோதமாக ஆற்று மணலை சரக்கு வேனில் கடத்த முயன்றது யார்?, அந்த வேன் டிரைவர் மற்றும் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.