கார்-லாரி பயங்கர மோதல்: சப்-இன்ஸ்பெக்டர், மனைவி- குழந்தை உள்பட 4 பேர் சாவு

சத்தியமங்கலம் அருகே காரும், லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர், மனைவி, குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கார்-லாரி பயங்கர மோதல்: சப்-இன்ஸ்பெக்டர், மனைவி- குழந்தை உள்பட 4 பேர் சாவு
Published on

சத்தியமங்கலம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 39). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுக்குய்யனூரில் உள்ள தமிழ்நாடு அதிரடிப்படை முகாமில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

அவருடைய மனைவி தேவிபாலா (38). இவர்களுக்கு ஜனனி (1) என்ற பெண் குழந்தை இருந்தது. செல்வம் குடும்பத்துடன் சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே தங்கியிருந்தார்.

இந்த நிலையில் செல்வம் சத்தியமங்கலம் அருகே வடவள்ளியில் வாடகைக்கு வீடு பார்த்திருந்தார். இதைத் தொடர்ந்து வீடு மாற்ற பொருட்களை எடுத்து செல்வதற்காக நேற்று மாலை 5 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளியான முருகேசன் (26) என்பவரை காரில் அழைத்துக்கொண்டு சென்றார்.

காரை செல்வம் ஓட்டினார். அவரது இருக்கைக்கு அருகே மனைவியும், குழந்தையும் உட்கார்ந்து இருந்தனர். முருகேசன் காரின் பின்பகுதியில் அமர்ந்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com