தூத்துக்குடியில் கெண்டை மீன் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி: நாளை வரை முன்பதிவு செய்யலாம்


தூத்துக்குடியில் கெண்டை மீன் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி: நாளை வரை முன்பதிவு செய்யலாம்
x

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி- ஆராய்ச்சி நிலையம் சார்பில் கெண்டை மீன் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்ப பயிற்சி செப்டம்பர் 15 முதல் 30 வரை அளிக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமாக விளங்கும் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கிவரும் மீன்வளர்ப்புத்துறையில் வருகின்ற 15.9.2025 முதல் 30.9.2025 வரை "நான் முதல்வர் வெற்றி நிச்சியம் திட்டத்தின்" கீழ் "கெண்டை மீன் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்பம் பயிற்சி" அளிக்கப்பட உள்ளது.

பயிற்சியின் முடிவில் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் செப்டம்பர் மாதம் 14ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்கள்து பெயரை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: உதவிப்பேராசிரியர், மீன்வளர்ப்புத்துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி. தொலைபேசி எண்- 0461 2340554, அலைபேசி எண்: 9884213262.

1 More update

Next Story