வேடசந்தூர் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து தச்சு தொழிலாளி சாவு

வேடசந்தூர் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து தச்சு தொழிலாளி இறந்தார்.
வேடசந்தூர் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து தச்சு தொழிலாளி சாவு
Published on

வேடசந்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சின்னக்கருப்பன் (வயது 39). தச்சு தொழிலாளியான இவர், வேடசந்தூரில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை சின்னக்கருப்பன் வேலையை முடித்துவிட்டு, வேடசந்தூரில் இருந்து சத்திரப்பட்டிக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் நின்றபடி அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

சத்திரப்பட்டி அருகே பஸ் வந்தபோது, படிக்கட்டில் நின்றிருந்த சின்னக்கருப்பன் தவறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com