மருதமலை முருகன் கோவில் மலைப்பாதையில் கார்கள் செல்ல தடை

மருதமலை முருகன் கோவில் மலைப்பாதையில் கார்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருதமலை முருகன் கோவில் மலைப்பாதையில் கார்கள் செல்ல தடை
Published on

கோவை,

பக்தர்களால் 7-ம் படை வீடு என்று அழைக்கப்படும் கோவை மருதமலை முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) கார்த்திகை மாத கிருத்திகை மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை தருவார்கள்.

இதனை கருத்தில் கொண்டு மருதமலை கோவில் அடிவாரத்தில் இருந்து கோவில் வரையுள்ள மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.பக்தர்களின் கார்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மலைப்பாதை படிக்கட்டுகள் அல்லது கோவில் பஸ் மூலம் பயணம் செய்து சுவாமியை தரிசனம் செய்யலாம் என்று மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் துணை ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com