வைகை ஆற்றில் கார் பார்க்கிங்: பொதுமக்கள் அதிர்ச்சி; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சைவம், வைணவம் என இரு சமயங்கள் தொடர்புடைய விழாவாகவும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு பார்க்கப்படுகிறது.
மதுரை
Published on: 

மதுரை

மதுரையில் வைகை ஆறு, கார் பார்க்கிங்காக மாறியுள்ளது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் வைகை ஆற்றில், கார்கள் நிறுத்தப்பட்டு, கார் பார்க்கிங்காக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி நேற்று புகார் எழுந்ததும் கார்கள் வெளியேற்றப்பட்டன. இந்த நிலையில், இன்றும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இரு சமயங்கள்

தமிழகத்தின் பழமை வாய்ந்த விழாக்களில் ஒன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழும் இந்த திருநாள், மதுரையில் பழம் பெருமையை விளக்கும் விழாவாகும். சைவம், வைணவம் என இரு சமயங்கள் தொடர்புடைய விழாவாகவும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு பார்க்கப்படுகிறது.

ஷாப்பிங்

இந்த நிலையில், வைகை ஆறு, கார் பார்க்கிங்காக மாறியுள்ளது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மதுரையின் முக்கிய வீதிகள், சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு ஷாப்பிங் செய்வோர், வியாபார ரீதியாக வந்து செல்வோர் தங்களுடைய கார்களை வைகை ஆற்றில் பார்க்கிங் செய்து செல்கின்றனர்.

அவர்கள், பல மணி நேரம் கார்களை நிறுத்தி விட்டு மீண்டும் வந்து அவற்றை எடுத்து செல்கின்றனர். இந்த விசயத்தில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com