மேலூர் அருகே மாட்டுவண்டி பந்தயம்

மேலூர் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
மேலூர் அருகே மாட்டுவண்டி பந்தயம்
Published on

மேலூர்

மேலூர் அருகே மத்தம் மேலநாடு வடக்கு தெரு அ. வல்லாளப்பட்டியில் உள்ள நாகரம்மாள் இளமநாயகி அம்மன் கோவில் பால்குட உற்சவ விழாவை முன்னிட்டு 7-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் அ.வல்லாளப்பட்டியில் நடைபெற்றது. பெரிய மாட்டு பிரிவு போட்டியில் 11 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல்பரிசு சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலகிருஷ்ணன், இரண்டாம் பரிசு அ.வல்லாளபட்டி ஏ.ஆர்.கே. ஆம்புலன்ஸ், நல்லாங்குடி முத்தையா சேர்வை, மூன்றாம் பரிசு அ.வல்லாளபட்டி அரியப்பன்பட்டி தினகரசாமி ஹரிஷ், பேரூராட்சி சேர்மன் குமரன் ஆகியோரது பந்தய மாடுகள் வெற்றி பெற்றன. சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் மொத்தம் 21 வண்டிகள் கலந்து கொண்டு இரண்டு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் சுற்றில் 11 வண்டிகள் சென்றன. முதல்பரிசு அ.வல்லாளபட்டி கனகசபை நினைவாக செந்தாமரை திண்டுக்கல் பெரியவர் மோகன்ராம், இரண்டாம் பரிசு குப்பச்சிபட்டி காளி, துணை வைரம் புலி மலைப்பட்டி சிவதர்ஷன் மாடுகள் வென்றன., இரண்டாம் சுற்று வண்டியில் 10 வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசு அ. வல்லாளபட்டி தினகரசாமி ஹரிஷ், பேரூராட்சி சேர்மன் குமரன், இரண்டாம் பரிசு அ. வல்லாளபட்டி கக்கப்பன் மலையாண்டி மருது ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com