பாலக்கோடு அருகே கோவில் திருவிழாவில்ஆபாச நடனத்துக்கு ஏற்பாடு செய்த 3 பேர் மீது வழக்கு

பாலக்கோடு அருகே கோவில் திருவிழாவில்ஆபாச நடனத்துக்கு ஏற்பாடு செய்த 3 பேர் மீது வழக்கு
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் கடந்த 5-ந் தேதி செல்லியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையடுத்து அன்று மாலை நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அரைகுறை ஆடையுடன் பெண்கள் நடனம் ஆடினர். இதுகுறித்து பேளாரஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பேளாரஅள்ளியை சேர்ந்த முனியப்பன் (வயது 60), பெரியாம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (28), சித்திரப்பட்டியை சேர்ந்த செல்வம் (30) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com