பாலக்கோடு அருகேமான் கறி சமைத்து சாப்பிட்ட 10 பேர் மீது வழக்கு

பாலக்கோடு அருகேமான் கறி சமைத்து சாப்பிட்ட 10 பேர் மீது வழக்கு
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள வேப்பில அள்ளி கிராமத்தில் மான் கறி சமைத்து சாப்பிடுவதாக பாலக்கோடு வனச்சரகர் நடராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் வேப்பில அள்ளி கிராமத்துக்கு சென்றனர். அப்போது அங்கு 10 பேர் மான் கறி சமைத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தர்மபுரி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மான் கறி வாங்கி வந்து சமைத்ததாக தெரிவித்தனர். இதையடுதது அவர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தலைமறைவான மான் கறி விற்ற நபரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com