10 பேர் மீது வழக்கு

கோவிலில் செயல் அலுவலரை சிறைபிடித்த 10 பேர் மீது வழக்கு
10 பேர் மீது வழக்கு
Published on

பேட்டை:

நெல்லை அருகே மேல திருவேங்கடநாதபுரம் கோவில் செயல் அலுவலராக இருப்பவர் செல்வி யோகவதி (வயது 42). இவர் பேட்டை கட்டபொம்மன் தெரு அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட வடபத்திரகாளி அம்மன் கோவிலில் கணினியில் துறை சார்ந்த தகவல்களை பதிவேற்றம் செய்வதற்காக, தனது உதவியாளர் கோமதியுடன் சென்றார்.

அப்போது அங்கு வந்த கும்பல், செயல் அலுவலர், உதவியாளர் ஆகியோரை பணி செய்ய விடாமல் தடுத்து, அவதூறாக பேசி, அவர்களை கோவிலில் வைத்து பூட்டி சிறை பிடித்தனர். இதுகுறித்து செயல் அலுவலர் செல்வி யோகவதி அளித்த புகாரின்பேரில், பேட்டை கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த நம்பி பாண்டியன் உள்ளிட்ட 10 பேர் மீது பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com