சென்னையில் முக கவசம் அணியாத 1,844 பேர் மீது வழக்கு

சென்னையில் முக கவசம் அணியாத 1,844 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் முக கவசம் அணியாத 1,844 பேர் மீது வழக்கு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் முதல் அலையை விட பாதிப்புகளும், இறப்புகளும் அதிகளவில் இருந்தன. இதனையடுத்து, கடந்த மே 10ந்தேதி முதல் அரசு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தியது. தளாவற்ற முழு பொதுமுடக்கம் மே 24ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

கொரோனா பரவல் குறைந்த நிலையில், பொதுமுடக்கம் கடந்த ஜூன் 7ந்தேதி முதல் படிப்படியாக தளாத்தப்பட்டது. எனினும், சென்னையில் 380 இடங்களில் வாகன சோதனை நடைபெறுகிறது.

சென்னையில் திங்கள்கிழமை பொதுமுடக்க மீறல் தொடாபாக 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 217 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல முகக்கவசம் அணியாதவாகள் மீது 1,844 வழக்குகளும், தனி நபா இடைவெளியை கடைப்பிடிக்காதவாகள் மீது 6 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com