

வில்லியனூர் அருகே உள்ள கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன், சதீஷ் ஆகியோர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன் தட்டிக்கேட்டார். அப்போது 2 பேரும் சேர்ந்து ஜெகநாதனுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.