குட்கா விற்ற 2 பேர் மீது வழக்கு

எருமப்பட்டி அருகே குட்கா விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குட்கா விற்ற 2 பேர் மீது வழக்கு
Published on

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே பொன்னேரி கைக்காட்டியில் உள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக எருமப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 2 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக சரவணன் (வயது 40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் கோடங்கிபட்டியை சேர்ந்த செல்வராஜ் (51) என்பவர் பெட்டிக்கடையில் குட்கா வைத்து விற்றது தெரியவந்தது. 2 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் எருமப்பட்டி 5 ரோடு அருகே சில்லி கடை நடத்தி வருபவர் வேல்முருகன் (27). இவர் கடையில் மது பிரியர்கள் மது அருந்த அனுமதிப்பதாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் பண்ணக்காரன்பட்டியில் உள்ள கடையில் மதுபிரியர்களுக்கு மது அருந்த அனுமதி அளித்ததாக பிரபு (39) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com