டிராக்டரில் மணல் கடத்திய 3 பேர் மீது வழக்கு

டிராக்டரில் மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
டிராக்டரில் மணல் கடத்திய 3 பேர் மீது வழக்கு
Published on

கடவூர் தாலுகா சுருமான் பட்டி பிரிவு ரோட்டில் பாலவிடுதி போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவெண் இல்லாமல் அதிவேகமாக வந்த டிராக்டரை தடுத்து நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் டிராக்டரில் வந்த 3 பேரும் தப்பி ஓடினர். இதையடுத்து அந்த டிராக்டரை சோதனை செய்தபோது அதில் ஒரு யூனிட் ஓடை மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, டிப்பருடன் கூடிய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து பாலவிடுதி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில் மணல் கடத்தி சென்றது கடவூரை சேர்ந்த பிரேம்குமார், பழனியப்பன் மற்றும் அய்யம்பாளையத்தை சேர்ந்த மணிவேல் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேர் மீதும் பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com