3 பேர் மீது வழக்கு

இளம்பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
3 பேர் மீது வழக்கு
Published on

நெல்லை பாளையங்கோட்டை ரகுமத்துல்லா நகரை சேர்ந்தவர் எர்சாந்த். இவரின் மனைவி தஜீன்நிஷா (வயது 29). இவர்களுக்கும், எர்சாந்தின் தம்பி சுல்தான், அவரின் மனைவி உள்ளிட்டவர்களுக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுக்குள் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சுல்தான், அவரின் மனைவி கனி பாத்திமா உள்ளிட்டவர்கள் தஜீன்நிஷாவை தாக்கி, வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களை அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தஜீன்நிஷா பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சுல்தான், கனி பாத்திமா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com