தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரியில் மது குடித்தபோது தகராறில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது39). தொழிலாளி. சம்பவத்தன்று இவர், அதேபகுதியை சேர்ந்த உறவினர்கள் சிலரும் பேரிகை பக்கமுள்ள செட்லு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது குடித்தனர். அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜெகதீஸ்வரனை, சிவா, கருணாகரன், சுரேந்திரன் மற்றும் சதீஷ் ஆகிய 4 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டியும், கற்களால் தாக்கியும் மிரட்டல் விடுத்தனர், இதுகுறித்த புகாரின் பேரில் சிவா உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com