வியாபாரியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தேனி அருகே வியாபாரியை தாக்கிய 4 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாபாரியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
Published on

தேனி அருகே அரண்மனைப்புதூரை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர், வீடுகளுக்கான உட்புற வடிவமைப்புகளுக்கான பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் அரண்மனைப்புதூரில் உள்ள ஒரு தனியார் மதுபான பாருக்கு தனது நண்பருடன் மது குடிக்கச் சென்றார். அப்போது அங்கு அதே ஊரைச் சேர்ந்த சிவராஜ் அங்கு வந்தார். அவர், ராஜாவிடம் தனக்கும் மதுபானம் வாங்கிக் கொடுக்குமாறு கூறினார். ஆனால், அவர் தன்னிடம் பணம் குறைவாக இருப்பதால் வாங்கிக் கொடுக்க இயலவில்லை என்று கூறினார். இதனால், அவரை சிவராஜ் மற்றும் அவருடன் வந்த செல்வேந்திரன் உள்பட 4 பேர் சேர்ந்து தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சிவராஜ் உள்பட 4 பேர் மீதும் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com