கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
Published on

நிலக்கோட்டை அருகே உள்ள சேவுகம்பட்டியை சேர்ந்தவர் அகமது இம்ரான் (வயது 29). அவருடைய மனைவி அஸ்மத் மர்லியா (23). இவர்களுக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்தநிலையில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அஸ்மத் மர்லியா புகார் கொடுத்தார்.

அதில், தனது கணவர், அவரது தாய் மும்தாஜ், தந்தை முகமது, தங்கைகள் பானு, கவுசல்யா நிஷா ஆகியோர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் 5 பேர் மீது, பேலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com