போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் வைத்த 5 பேர் மீது வழக்கு

போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் வைத்த 5 பேர் மீது போலீசா வழக்குப்பதிவு செய்துள்ளனா.
போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் வைத்த 5 பேர் மீது வழக்கு
Published on

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், முரளி ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பூக்கடை, காலணிகள் விற்பனை கடை நடத்தி வந்த விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்த ராம், கே.கே.சாலை செந்தில், விழுப்புரம் கீழ்செட்டி தெருவை சேர்ந்த ஷிதயதுல்லா, சாலாமேடு அய்யனார், விழுப்புரம் சுதாகர் நகர் மணிகண்டன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com