முதியவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

தேனி அருகே முதியவரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முதியவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
Published on

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகர்ராஜ் (வயது 63). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த தீபா என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது. இதன் காரணமாக தீபா, அவருடைய மாமனார் பாஸ்கரன் மற்றும் சிலர் அழகர்ராஜை நேற்று முன்தினம் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில், தீபா, பாஸ்கரன் உள்பட 6 பேர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com