‘அரியர்’ தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு - ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

அரியர்’ தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
‘அரியர்’ தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு - ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா ஊரடங்கினால் தமிழகத்தில் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர், கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும், இது அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பு, பல்கலைக்கழகம் மானியக்குழு (யு.ஜி.சி.) விதிகளுக்கு எதிரானது. இவ்வாறு அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்க உயர் கல்வித்துறைக்கு அதிகாரம் இல்லை. பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் சிண்டிகேட் குழுவுக்குத்தான் செமஸ்டர் தேர்வை நடத்தவும், ரத்து செய்யவும் அதிகாரம் உள்ளது. எனவே தமிழக அரசின் இந்த அறிவிப்பு சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். தமிழக அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்து, யு.ஜி.சி. விதிகளின்படி அரியர் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com