பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதல்-அமைச்சர் விஜய், கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
Published on: 

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சாப்ட்வேர் என்ஜினீயர் கவுதமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,

"சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் இடநெருக்கடியை சமாளிக்க ரூ.27 ஆயிரம் கோடி செலவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1,700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ரூ.680 கோடி அரசு பணம் செலவழிக்கப்பட்டது.

48 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, திட்டத்தை கைவிடுவதாக முதல்-அமைச்சர் விஜய், கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.

நிபுணர் குழுவின் அறிக்கைகள் இல்லாமல், பொருளாதார ஆய்வுகள் ஏதும் நடத்தாமல், த.வெ.க. அரசு இந்த திட்டத்தை கைவிட்டுள்ளது. எனவே, முதல்-அமைச்சரின் அறிவிப்பை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும். பரந்தூர் திட்டத்தை கைவிடும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரவுள்ளது.

X